Tamil Matrimony Blog - Multi Matrimony

ஆராத்தி எடுப்பது ஏன்?

Facebooktwitterredditpinterestlinkedinmailby feather

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது,ஆரத்தி எடுக்கும் நடைமுறை.

Arthi

ஆரம்ப காலத்தில்இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்தநடைமுறை வெறும் சடங்குக்காகசெய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாகஇதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமானஅர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம்முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள்,
மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில்தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில்சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது.
இதை ஒரு பரந்த பாத்திரத்தில்எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர்
எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சுமபகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள்புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல்,வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடையதிருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர்மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.மஞ்சள் மற்றும்சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.
அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷஅணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷஅணுக்களை அழித்து நம் நலன்பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள்பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும்முன்பே ‘ஆரா’ சரீரத்தில் சேர்ந்துள்ளதிருஷ்டி மற்றும்கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்தியபின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள்அறிந்து சரியான பாவனையுடன்செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும்
முழுமையாக இருக்கும்.

Jun 24, 2015
by
Categories :Festivals, Marriage Quotes, Multi Matrimony, Tamil Matrimony Customs, Tips, Tips for Marriage Life, Wedding Tips
  • Subscribe Us

  • RSS Daily Horoscope

  • CATEGORIES

  • Tags